கவினைத் தொடர்ந்து ரியோவிற்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன் !

தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன். நடிப்பது மட்டுமின்றி டப்பிங் பேசுவது, பாட்டு பாடுவது, பிரபல தொலைக்காட்சியில் நடுவராக இருப்பது என்று எப்போதும் தன்னை பிஸியாக வைத்துள்ளார். கடைசியாக இவர் தமிழில் சரவணன் மீனாட்சி ஹீரோ கவினுடன் இணைந்து நட்புன்னா என்ன தெரியுமா படத்தில் நடித்து இருந்தார். அதே போன்று மலையாளத்தில் வைரஸ் படத்தில் நடத்துத்திருந்தார். இந்த நிலையில் தற்போது ரம்யா நம்பீசன்னின் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. பத்ரி வெங்கடேஷ் இயக்கவுள்ள இந்த படத்தில் சரவணன் மீனாட்சி ஹீரோ ரியோ கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஏற்கனவே பத்ரி தமிழில் பானா காத்தாடி மற்றும் செம போதை ஆகாதே படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் மூலம் மூன்றாவது முறையாக பத்ரி வெங்கடேஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி உருவாகி உள்ளது.