கவின் மேல அபிராமிக்கு கிரஷ் – அமர்க்களப்படும் பிக்பாஸ் வீடு !

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் முதல் நாள் அனுபவம் நேற்று ஒளிபரப்பானது. ஆட்டம் பாட்டம் என அட்டகாசமாக இருந்தது முதல் எபிசோடு. இந்நிலையில் அபிராமி நள்ளிரவில் லிவிங் ஏரியாவில் ஷெரினுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, சரவணன் மீனாட்சி சீரியலின் போதே கவின் மீது தனக்கு க்ரஷ் ஏற்பட்டு விட்டதாக கூறுகிறார். பின்னர் ஃபேஸ்புக்கில் தனக்கு ரிக்வெஸ்ட் வந்ததாகவும் அதுகுறித்து கேட்டபோது கவின், அது தான் இல்லை என்றும் தனது பெயரில் போலி கணக்குகள் இருப்பதாக கூறியதாகவும் கூறினார். மேலும் ஃபேஸ்புக்கில் கவினை ஃபாலோ செய்வதாகவும் கூறினார் அபிராமி. பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும், கவினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதை சக நண்பிகளிடம் கூறி சந்தோஷப்பட்டுக்கொண்டார் அபிராமி.