கவுதம் மேனன் இயக்கத்தில் இணையும் விக்ரம்
பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது தனுஷ் நடிப்பில் இயக்கி வரும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா' இப்படத்தை அடுத்து விக்ரமுடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த 'துருவ நட்சத்திரம்' என்று கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கவுதம் மேனனுக்கும்,சூர்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்தப்பட்ட இந்த படம் தற்போது மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தில் விக்ரமுடன் முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கவுதம்மேனன் தரப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளது.
அமெரிக்காவில் பிரமாண்டமான தயாராகவுள்ள இந்த படத்தை அவருடைய 'சோனி மூஸிக் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.