கஸ்தூரி:டுவிட்டரில் மோதல்….

நடிகை கஸ்தூரி டுவிட்டரில் அரசியல் சம்பந்தமான கருத்துக்களை பகிர்வதாக நினைத்து கொண்டு பல சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு பல மிரட்டல் கால் வந்துள்ளது. இவர் கமலின் அரசியல் கட்சி பெயரை குறித்து கருத்து  வெளியிட்டு இருந்தார் இதனால் அவருக்கு சிலருடன் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் கடுமையான வார்த்தைகளை பதிவிட்டு மோதிக்கொண்டனர். இதற்கு ஏன் இப்படி கோவப்படுகிறீர்கள் என்று கேட்டபோது அவர் ” ஆயிரம் திட்டுகள் வருகிறது. அவற்றை உதாசீனம் செய்து வருகிறேன். மனதில் பட்டத்தை சொல்லி பழக்கப்பட்டு விட்டேன்.இனி இன்னும் பொறுமையாக இருக்க முயற்சிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.