“காசு மேல காசு” படத்தின் மூலம் அறிமுகமாகிறார் மற்றொரு காயத்ரி….

கே.எஸ் பழனி இயக்கத்தில் “காசு மேல காசு” படத்தில் மற்றொரு காயத்திரி அறிமுகமாகிறார். தமிழில் ஏற்கனவே காயத்ரி,காயத்ரி ரகுராம் என்ற பெயரில் இருக்கும்போது அதே பெயரில் இன்னோருவர். பி.ராதாகிருஷ்ணன் தயாரிக்கும் இந்த படம் “பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை நன்கு அமைய படாதாபாடுபடுகின்றனர். இந்த வகையில் தன் மகனுக்கு கோடீஸ்வர பெண்ணை திருமணம் செய்ய பேராசையுடன் சுற்றி வரும் மயில் சாமி அதற்காக  நாடகம் ஆடி பெண் தேடுகின்ற கலகலப்பான கதை. இதில் ஹீரோ ஷாருக், மயில் சாமி, கஞ்சா கருப்பு, சாமிநாதன், கோவை சரளா, நளினி,மதுமிதா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இசை பாண்டியன்,ஒளிப்பதிவு சுரேஷ் தேவன். இந்த படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் நடக்கிறது.