காஜலின் இருவேறு மொழி படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது !

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு தற்போது தமிழில் கோமாளி, பாரிஸ் பாரிஸ், இந்தியன்-2 ஆகிய 3 படங்களும், தெலுங்கில் ‘ரணரங்கம்’ என்ற படமும் கைவசம் உள்ளன. இவற்றில் கோமாளி படம் முடிந்துள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். அதே நாளில் ரணரங்கம் தெலுங்கு படமும் வெளியாகிறது. இதில் சர்வானந்த், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்துள்ளனர். சுதீர்வர்மா இயக்கி உள்ளார். அதிரடி திகில் படமாக தயாராகி உள்ளது.இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிப்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறார். ஒரே நாளில் 2 படங்கள் வெளியாவது இரட்டை சந்தோஷத்தை அளித்துள்ளது என்று டுவிட்டரில் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.