காஜல் அகர்வால் பெரியம்மா ஆனார்…..

நிஷா அகர்வால் நடிகை காஜல் அகர்வாலின் தங்கை. இவர் விமல் நடித்த நஷ்டம் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அமையாததால் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கரண் வலேச்சா  என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு முடிந்து நேற்று ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இஷான் வலேச்சா என்று பெயர் வைத்துள்ளனர். காஜல் அகர்வால் தனது டிவிட்டரில் பிறந்த குழந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.