காஞ்சனா ரீமேக்கை இயக்குவது ஏன்? லாரன்ஸ் விளக்கம் !

தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கியவர், ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின்  முதல் பாகத்தை, லட்சுமி பாம் என்ற பெயரில் இந்தியில் இயக்க தொடங்கினார். அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு  மும்பையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. பிறகு திடீரென்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. தன்னிடம் அனுமதி பெறாமல் போஸ்டரை  வெளியிட்டதாகவும், தனக்கு சுயமரியாதை முக்கியம் என்றும் சொல்லி ஆவேசப்பட்ட ராகவா லாரன்ஸ், இந்தி ரீமேக்கை இயக்கும் பொறுப்பில் இருந்து விலகுவதாக  அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனம், ராகவா  லாரன்சுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில் சுமூக முடிவு  ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் லட்சுமி பாம் படத்தை இயக்குவதாக தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்