Cine Bits
காடுகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அமேசான் அட்வென்சர்.

அமேசான் அட்வென்சர் என்ற படத்தை பிரபல வங்காள இயக்குனர் கமலேஸ்வர் முகர்ஜி இயக்கியுள்ளார். இந்த படத்தை மகேந்திர சோனி, ஸ்ரீகாந்த் மெகா ஆகியோர் எஸ்.வி.எப் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் 7 மொழிகளில் தயாரித்துள்ளனர். இது காடுகளை மையமாக கொண்ட ஹாலிவுட் பாணியிலான பிரம்மாண்டமான படம். இப்படத்தில் காடுகளில் புதையலைத் தேடிச் செல்லும் ஒரு குழுவினரின் திகில் அனுபவங்களை கொண்ட கதை. இந்த படம் அமேசான் ஓபிஜான் என்ற கிராபிக் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதில் சமுகிக் ஹல்டார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் 22ந் தேதி வெளியான இந்த படம், ஜனவரி மாதம் 5ம் தேதி இந்திய முழுவதும் வெளிவருகிறது. இதில் தேவ், லெபானி சர்க்கார், தமல் ராய், ஸ்வத்னா குலகேவா, ஆகியோர் நடித்துள்ளனர்.