காதலனுக்கு பிறந்தநாள் பரிசாக படத்தயாரிப்பாளராக்கினார் நயன்தாரா !

இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இவர், அதன் பிறகு விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான், சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அனிருத், வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா போன்ற பிரபலங்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவருக்கு பிறந்தநாள் பரிசாக நயன்தாரா தான் நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளார்.