காதலரை மணக்கிறார் சிம்பு ஹீரோயின்!

தனு­ஷு­டன் ‘மயக்­கம் என்ன’, சிம்­பு­வு­டன் ‘ஒஸ்தி’ படங்­க­ளில் நடித்­த­வர் ரிச்சா கங்­கோ­பாத்­யாய. திடீ­ரென சினி­மா­வி­லி­ருந்து விலகி சொந்­த­மாக பிசி­னஸ் தொடங்­கி­னார். இந்­நி­லை­யில் வெளி­நாட்டை சேர்ந்த ஜோ லிக்­கல்லோ என்­ப­வரை காத­லித்து வந்­தார். இந்த காத­லைப் பற்றி சில மாதங்­க­ளுக்கு முன்­பு­தான் அவர் வெளி உல­கிற்கு தெரி­வித்­தார். இதை­ய­டுத்து ஜோ லிக்­கல்­லோ­வு­டன் நிச்­ச­ய­தார்த்­தம் செய்து கொண்­டார். இந்­நி­லை­யில் தமி­ழில் மீண்­டும் நடிக்க அவ­ருக்கு வாய்ப்­பு­கள் வந்­தன. ஆனால், அவர் நடிக்க மறுத்து விட்­டார். இப்­போ­து­தான் திரு­ம­ணத்­துக்கு தயா­ராகி வரு­வ­தா­க­வும் விரை­வில் காத­லரை மணப்­பேன் என்­றும் ரிச்சா தெரி­வித்­துள்­ளார். கடந்த 2 வரு­டங்­க­ளாக அவர் ஜோவை காத­லித்து வரு­கி­றார்.