காதலர் தினத்தில் திருமணசெய்தியை உறுதி செய்தநர்- ஆர்யா, சாயிஷா ஜோடி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. கஜினிகாந்த் என்ற படத்தின் மூலம் சினிமாவில் தன்னுடன் ஜோடி சேர்ந்த சாயிஷாவை வாழ்க்கை துணையாக தேர்வு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் மூலம் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது நண்பர் விஷால் தனது திருமண தேதியையை உறுதி செய்துவிட்டார், எனவே ஆர்யாவும் தனது திருமண தேதியை வருகிற மார்ச் மாதத்தில் சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக கூறியுள்ளார். இதை சாயிஷாவும் தனது த்விட்டேர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இருவரின் திருமணமும் இஸ்லாமிய வழக்கப்படி இரு தினங்களுக்கு நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகம் திரண்டு வந்து வாழ்த்து கூறும் என்பதால், பிரமாண்டமான திருவிழாவாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.