காதல் திருமணம் செய்யவிருக்கும் டாப்சி !

கேம் ஓவர்' உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ள அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார் இவர். தமிழ் படங்களை விட இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் முன்னணி நடிகையாகவும் மாறியிருக்கிறார். தனது காதல் குறித்து டாப்சி அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் இவர், வீட்டில் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. நான் ஒருவரை காதலித்து வருகிறேன். தற்போது நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும் போது நான் திருமணம் செய்துகொள்வேன். திருமணத்திற்கு பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனது திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தான் நடக்கும். என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.