காதல், நட்பை பிரதிபலிக்கும் கதையம்சத்தில் மீண்டு நடிக்க வருகிறார் அமலா !

தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அமலா. 1992-ல் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கினார். 5 வருடங்களுக்கு முன்பு ‘மனம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்வானந்த் கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் அவருக்கு தாயாக நடிக்கிறார். காதல், நட்பை பிரதிபலிக்கும் கதையம்சத்தில் தயாராகிறது. இதில் கதாநாயகியாக ரீத்து வர்மா மற்றும் நாசர், ரமேஷ் திலக், சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.