காதல் மனைவி பற்றி மனம் திறக்கிறார் விஷால் !

தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். இது அனைவரும் நினைப்பது போன்று பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் அல்ல மாறாக இது காதல் திருமணம். நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அனிஷாவை முதன்முதலாக பார்த்தேன். அவரை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. தெரு நாய்கள் பற்றிய படம் குறித்து நான் அனிஷாவிடம் தெரிவித்து அவரின் கருத்தை கேட்டிருந்தேன். அந்த படம் குறித்த விவாதங்களின் போது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. நான் தான் காதலை முதலில் சொன்னேன். அனிஷாவை கடவுள் எனக்காக அனுப்பி வைத்துள்ளார். அனிஷா தேசிய அளவு கூடைப்பந்து வீராங்கனை ஆவார், மேலும் சமூக சேவை செய்து வருகிறார். அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பது அவர் விருப்பம் அதில் நான் தலையிட மாட்டேன். அவர் ஒரு புலிக்கு பயிற்சி அளித்து வருகிறார். அவர் அந்த புலியை எளிதில் தூங்க வைத்துவிடுவார். அதை முதன் முதலாக பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் என்கிறார் விஷால்.