கானா பாலா கொடுத்த அதிர்ச்சி தகவல். ரசிகர்கள் வருத்தம்!

கானா பாலா, தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். அட்டகத்தியில் 'ஆடி போனா ஆவணி', 'நடுக்கடலுல கப்பல' பாடல்கள் மூலம் பிரபலமானார் கானா பாலா. இவர் பாடினாலே ஹிட் தான் என்று உருவாகிவிட்டது. தற்போது போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு பாடல் ஒன்றை சமீபத்தில் பாடி அதை கானா பாலா வெளியிட்டுள்ளார். மேலும், இனி சினிமா பாடல்களே பாட மாட்டேன் என கானா பாலா முடிவெடுத்துள்ளாராம், இவை ரசிகர்களுக்கு கண்டிப்பாக வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இனி சமூக அக்கறை கொண்ட பாடல்களை மட்டும் பாடி தனி ஆல்பமாக ரிலிஸ் செய்வாராம்.