காப்பான் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி ஷங்கர் வைரமுத்து !

சூர்யா, இயக்குநர் கே.வி.ஆனந்த் 3-வது முறையாக காப்பான் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாள் வரும் ஜூலை 23-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அவர் பிறந்தநாளுக்கு பரிகாக அளிக்க காப்பான் படத்தின் ஆடியோ ஜூலை 21-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. காப்பான் படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த தகவலை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.