காப்பான் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்!

படத்தில் ஏற்கனவே சூர்யாவுடன் ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி, மோகன்லால், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது நடிகை பூர்ணா இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் இவரும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா மற்றும் சமுத்திரக்கனி அவருடைய பாதுகாவலர்களாகவும் நடித்து வருகின்றனர்.  படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.