Cine Bits
காப்பான் படம் எப்படியிருக்கும்? படக்குழு தரப்பில் வெளிவந்த அப்டேட்!
சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் காப்பான். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் இதே கூட்டணி தான் அயன் படத்தை கொடுத்தது, அதனாலேயே பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் படத்தில் பணியாற்றி வரும் எடிட்டர் ஆண்டனி, காப்பான் படம் விறுவிறுப்பான, த்ரில்லர், பல திருப்பங்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இப்படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டுவர தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.