காமெடிக்கு ஆசைப்படும் சேத்தன் !

தாம்தூம், தமிழ்படம், ரெண்டாவதுபடம், பொல்லாதவன் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் சேத்தன். டி.வி சீரியல்களில் வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார். சேத்தனுக்கு காமெடி நடிகராகவே ஆசை உள்ளதாம். இதுபற்றி அவர் கூறியது: நான் டிவியில் நடித்துக் கொண்டிருந்தபோது என்னை ‘தாம் தூம்’  படத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் ஜீவா. அது வில்லத்தன மான கதாபாத்திரம், எனக்கு நகைச்சுவையுணர்வு அதிகம். பாசிடிவ், நெகடிவ், காமெடி என எல்லா கேரக்டரில் நடிக்க எனக்கு ஆசை. சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப், சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு படங்களில் உள்பட 5 புதிய படங்களில் நான் நடித்து வருகிறேன்’ என்றார் சேத்தன்.