காமெடி கலந்த திரைக்கதையாக வெளிவரும் அர்ஜுன் ரெட்டி !

டோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய் தேவரகொண்டா – பூஜா ஜாவேரி நடித்து தெலுங்கில் துவாரகா என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தை ஸ்ரீ லக்ஷ்மி ஜோதி கிரியே சன்ஸ் படநிறுவனம் சார்பாக A.N.பாலாஜி  தமிழில்  தயாரித்துள்ள 'அர்ஜூன் ரெட்டி' படம் இந்த மாதம் 26 ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைக்கதை அனைவரையும் ரசிக்க வைக்கும். கோடைக்கு இந்தமாக இந்த அர்ஜுன்ரெட்டி இருக்கும்.