காமெடி கொரியன் வெப் சீரிஸில் ரெஜினா, நிவேதா தாமஸ்!

கொரிய படத்தின் ரீமேக்கில் ரெஜினா காஸன்ட்ராவும் நிவேதா தாமஸும் நடிக்க உள்ளனர். சமீபகாலமாகவே இவருக்கு அவ்வளவாக படவாய்ப்புகள் இல்லை. தெலுங்கின் ஓரிரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். தற்சமயம் இவரது கவனம் வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளது. 2017 ஆம் ஆண்டு வெளியான கொரிய ஆக்‌ஷன் காமெடி படம், மிட்நைட் ரன்னர்ஸ். இந்த படத்தில் ரெஜினாவுடன் சமீபத்தில் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்த நிவேதா தாமஸும் நடிக்கிறார். இந்த படத்தை சுதீப் வர்மா இயக்குகிறார். கொரியன் மொழியில் ஜேசன் கிம் இயக்கிய இந்த படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் சுரேஷ் பாபு, சுனிதா ஆகியோர் தயாரிக்கின்றனர். இவர்கள் ஏற்கனவே சமந்தா நடித்த ஓ பேபி படத்தை தயாரித்தவர்கள்.