காமெடி நடிகர் சதீஷுக்கு திருமணம் – திரையுலகினர் வாழ்த்து !

மறைந்த நடிகர் கிரேஸி மோகன் நாடக குழுவில் பணியாற்றியவர் காமெடி நடிகர் சதீஷ். இயக்குனர் விஜய் இயக்கிய மதராச பட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வளர்ந்தார். குறிப்பாக சிவகார்த்திகேயன் படங்களில் இவரின் பங்களிப்பு முக்கியமானதாகும். சமீபத்தில் இவருக்கும் இயக்குனர் சாச்சியின் தங்கை சிந்துவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நேற்று (டிசம்பர் 11) காலை சென்னை வானகரத்தில் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது திருமணத்தில் கலந்து கொண்டனர். அவரது நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தாருடன் சதீஷின் திருமணம் முதல் மாலை நடந்த வரவேற்பு வரை அனைத்திலும் தனது நண்பனுக்காக முன்னின்று நடத்தி வைத்தார். விஜய் சேதுபதி ஜீவா,ரோபோசங்கர், ஜனனி ஐயர், ஏ.ஆர்.முருகதாஸ்,பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.