காயத்ரி ரகுராம்: அஸ்வினியை கொலை செய்த அசுரன்..

காயத்ரி ரகுராம் நடிகையாகவும், நடன இயக்குனராகவும் உள்ளார். இவர் சமூக பிரச்சினைகள் குறித்து சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். ஆனால் சமீபத்தில் அவர் என்ன விஷயம் சொன்னாலும் அதனை வலைத்தளத்தில் சிலர் கேலி செய்து வருகிறார்கள். அவதூறாக பேசுகிறார்கள். இதனால் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி தன்னை தரக்குறைவாக பேசுபவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து தண்டனை வாக்கி கொடுப்பேன் என்று எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் சென்னை கே.கே.நகரில் கல்லூரி மனைவி அஸ்வினியை காதல் விவகாரத்தில் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் அழகேசன் என்பவர் கழுத்தை அறுத்து கொன்றதை அவர் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் “இளம்பெண் அஸ்வினியை காதல் மிரட்டல் என்ற பெயரில் இதயமும், அறிவும் இல்லாத அசுரன் கொலை செய்துள்ளான் என்றும், அஸ்வினி குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.