கார்த்திக்கு ஜோடியாக, ஜெயம்ரவிக்கு அக்காவாக பொன்னியின் செல்வனில் திரிஷா !

‘பொன்னியின் செல்வன்’ நாவல் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட சினிமா படமாக தயாராகிறது. ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர். பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடிப்பதாக கூறப்படுகிறது. திரிஷா குந்தவையாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுபோல் ராஜராஜ சோழன் வேடத்தில் ஜெயம் ரவி நடிப்பதாகவும் பேசப்படுகிறது. ராஜராஜ சோழனின் அக்காள் குந்தவை என்பதால் ஜெயம் ரவிக்கு அக்காவாக திரிஷா நடிப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. குந்தவைதான் வந்தியத்தேவனுக்கு ஜோடி. எனவே கார்த்திக்கு ஜோடியாக அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.