கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிக்கா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

புதிய படமொன்றில் கார்த்தி ஒப்பந்தமாகி உள்ளார் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இது கார்த்திக்கு 19-வது படமாகும். இன்னும் பெயர் வைக்கவில்லை, அதிரடி கலந்த நகைச்சுவை படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. சென்னை உள்பட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதற்காக பெரிய பொருட்செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மண்டன்னா நடிக்கிறார். இவர் தெலுங்கில் வெற்றி பெற்ற கீதா கோவிந்தம் படத்தில் நடித்து ஆந்திர திரையுலகில் பிரபலமாக இருக்கிறார். யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.