கார்த்திக் சுப்பராஜ் & விஜய் – இணையும் புது கூட்டணி !

கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் இறைவி மற்றும் மேயாத மான் ஆகியப் படங்களைத் தயாரித்துள்ளார். ஓராண்டுக்கும் மேலாக படம் எதுவும் தயாரிக்காமல் இருக்கும் கார்த்திக் சுப்பராஜ் இப்போது விஜய்யை வைத்து பிரம்மாண்டமாக ஒரு படத்தைத் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கார்த்திக் சுப்பராஜ் இதற்காக அண்மையில் நடிகர் விஜய்யை சந்தித்து இது குறித்து பேசியுள்ளதாகவும் விஜய் நம்பிக்கையான முடிவை அறிவித்துள்ளதாகவும் தெரிகிறது, கார்த்திக் சுப்பராஜ் வரிசையாக தனுஷ் மற்றும் ரஜினியை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்க இருப்பதால் இந்த படத்தை அவர் இயக்க மாட்டார் எனத் தெரிகிறது. விஜய்யை வைத்து இயக்கினால் தானா இணைந்தால் போதுமே.