கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகை !

கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து பேட்ட படம் இயக்குவதற்கு முன்பே தனுசுடன் இணைந்து ஒரு படம் எடுப்பதாக பேச்சுவார்த்தை சென்றது. ரஜினி படத்துக்காக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படம் தள்ளிப்போனது. இப்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. வெளிநாடுகளை மையமாக கொண்டு தாதாக்கள் படமாக உருவாகும் இந்த படத்தில் தற்போது ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளார். மலையாளத்தில் இவர் கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. பேட்ட படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.