கார்த்தியின் தேவ் படக்குழுவின் அறிவிப்பு!

கடைக்குட்டி சிங்கம்' படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் 'தேவ்'. படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். கிரைம் த்ரில்லர் கலந்த காதல் படமான இதில் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் கவனித்துள்ளார். ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார்.