Cine Bits
கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் – ரகுல் ப்ரீத் சிங்!

ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தேவ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரகுல், கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக கூறினார். ரகுல் ப்ரீத் சிங் பேசும் போது, இயக்குநர் ரஜத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். கார்த்தியுடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்தியுடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.