கார்த்தியுடன் நடிக்கும் ஜோதிகா!

ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்திலும் ,ஜீத்து ஜோசப் இயக்கும் படத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளார் கார்த்தி. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிகர் கார்த்திக்கு இனையான முக்கியமான கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜீத்து ஜோசப் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை இறுதி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.