கார்த்தியைத் தொடர்ந்து சூர்யாவிற்கு ஜோடியாகவும் ரஷ்மிகா !

சூர்யா ‘காப்பான்’ படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரை போற்று’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. தற்போது மீண்டும் ஹரி இயக்கும் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சிங்கம் பாகம் 4 கதையாக இருக்குமோ என எண்ணப்பட்டது, ஆனால் இது வேறு கதை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ராஷ்மிகா கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் தமிழ், தெலுங்கில் வெளியான ‘டியர் காம்ரேட்’ படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தார். தற்போது கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’ படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.