கார்த்தி “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடிக்கிறார்….

பாண்டியராஜ் இயக்கத்தில் “கடைக்குட்டி சிங்கம்” படத்தை சூர்யா தயாரிக்கிறார். இந்த படத்தில் கார்த்தி நடிக்கிறார். இவருடன் சாயிஷா, பிரியா  பவானி சங்கர்,  அர்த்தனா, சத்யராஜ், மவுனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி ஆகிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இந்த படத்தில் இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் கார்த்தி கெத்தான விவசாயி வேடத்தில் நடித்து மாதம் 1.5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். படத்தில் 5 அக்காக்களுக்கு தம்பியாக நடிப்பதால் இந்த படத்திற்கு கடைக்குட்டி சிங்கம்  என்ற பெயர் வைத்துள்ளனர். இளைஞர்கள்  சிலர் இப்போது செய்யும் வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள் இந்த படம் வெளியிட்ட பிறகு இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வந்துவிடுவார்கள் என்ற அளவிற்கு இந்த படம் உள்ளது என்று கூறியுள்ளனர்.