‘காற்று வெளியிடை’க்கு பின் கார்த்தியின் அடுத்த விஷுவல் விருந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ – சத்யன் சூரியன்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசருக்கு 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்ததே இந்த டீசரின் வெற்றிக்கு சான்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் கார்த்தி நடித்து வரும் இன்னொரு படமான 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற திரைப்படம் ஒரு செம விஷுவல் விருந்தாக இருக்கும் என்று அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

'சதுரங்க வேட்டை' இயக்குனர்  வினோத் இயக்கிவரும் “தீரன் அதிகாரம் ஒன்று“ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்சல்மர் என்ற பகுதியில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், அடுத்தகட்ட படப்பிடிப்பு பூஜ் என்ற பகுதியில் 20 நாட்கள் தொடர்ந்து  படபிடிப்பு நடைபெறும் என்று கூறியுள்ளார்.