காலா மற்றும் 2 .௦

இயக்குனர் சங்கர், ரஜினி நடித்துள்ள 2 .௦ படத்தின் இறுதிக்கட்ட வேலையை ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் . இன்னொரு பக்கம் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து படத்தின் வேலைகளை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.
தற்போது காலா படத்தில் எடிட்டிங் வேலைகள் நடைப்பெற்று வருகின்றது சமீபத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் உள்ளது.ரஜினியின் 2 .௦ படம் ஜனவரி மாதம் வெளியாவதாக இருந்தது கிராபிக்ஸ் வேலைகள் தொய்வு ஏற்பட்டதால் ரிலீஸை ஏப்ரல் மாதம் தள்ளிவைக்கப்பட்டது .காலா படத்தை, 2 . 0 படத்திற்கு முன்பு வெளியிடுவதாக திட்டமிட்டாராம் தனுஷ் .
இதற்கு லைகா தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் லைகா இந்த படத்தை வாங்கி கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டதாம் .அதன் பிறகு காலா படத்தை 2 .௦ படத்திற்குப் பின்பு வெளியிடுவதாக தனுஷ் சம்மதம் தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது.