காலா ரிலீஸ் தேதி அறிவிப்பு

கபாலி பட​ வெற்றிக்கு பின்பு ரஜினி – ரஞ்சித் கூட்டணியில் உருவான​ படம் காலா. இந்த​ படத்தை தனுஷ் தயாரித்தார். 

காலா படம் மும்பையில் வாழும் தமிழகத்தின் தாதா ஒருவரின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த​ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக​ ஹூயூமா குரேஷி, நானா படேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த​ படம் இந்த​ மாத​ இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழ் சினிமாவில் நிலவி வரும் ஸ்ரைக் காரணமாக​ அடுத்த மாதம் ஜீன் 7-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப் பூர்வமாக​ அறிவிக்கப்பட்டுள்ளது.