கால் லிஸ்டில் காத்திருக்கும் இயக்குனர்கள்

இளைய தளபதி விஜய், எத்தனை படங்கள் கொடுத்தோம் என்பதை விட எப்படியான படம் கொடுத்தோம் என்பதையே பார்க்கிறார். அந்த வகையில் ரசிகர்களுக்கும் படம் எடுத்தவர்களுக்கும் முழு திருப்தி இருக்க வேண்டும் என கதை கேட்பதில் அதிக ஈடுபாடு காட்டுகிறார். தன்னை வைத்து படம் எடுப்பவர்களை மட்டுமில்லாமல், மற்ற நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுக்கும் இயக்குனர்களுக்கு போனில் அழைத்து வாழ்த்து சொல்கிறாராம். மீண்டும் நல்ல கதை இருந்தால் வாருங்கள் பேசலாம் என அவருக்கு அழைப்புறார். அப்படி ஒரு கதை பிடித்தால் மிகவும் யோசித்து தான் ஓகே சொல்வாராம் விஜய். இவரிடம் கதை சொல்லிவிட்டு கார்த்திக் சுப்புராஜ், செல்வராகவன், கே.வி.ஆனந்த் என இன்னும் சிலர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.