காளிதாஸ் ஜெயராமுக்கு பார்வதி கூறிய அறிவுரை….

ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், “பூமரம்” என்ற படம் மலையாளத்தில் முதன்முறையாக நடித்துள்ளார். இந்த  படம் மார்ச் 16 தேதி வெளியாக இருப்பதாக மீண்டும் அறிவித்துள்ளனர். இதிலும் மாற்றம் வந்தால் அதில் ஆர்ச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை என்றும், இவற்றில் எல்லாம் மனதை போட்டு குழப்பி கொள்ள கூடாது என காளிதாஸ் ஜெயராமுக்கு  அவரது அம்மாவும், முன்னாள் நடிகையுமான பார்வதி அறிவுரை குறியுள்ளாராம்.” உன் தலைக்கு மேலே நிழலுக்காக ஒரு கூரை இருக்கிறது. உன்னுடைய உணவும், உனக்கு ஒரு பிரச்சனையாக இருக்கப்போவதில்லை. ஆகவே நல்ல படங்களை தேர்தெடுத்து நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொள். பணத்தை பற்றியோ நேரத்தை பற்றியோ ஒருபோதும் கவலைப்பட கூடாது” என தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறியுள்ளார் பார்வதி.