காஷ்மோரா சென்சார் ரிசல்ட்

கோகுல் இயக்கத்தில் கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்த 'காஷ்மோரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.இந்நிலையில் இந்த படம் சென்சார் சென்றபோது.இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ/ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இந்த படம் 'யூ' சர்டிபிகேட்டை பெறாததால் தமிழக அரசின் வரிவிலக்கு 30% கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் நல்ல லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.