கிண்டலாக மெசேஜ் போட்ட குறும்பு ரசிகர்கள் !

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர் அமலாபால். இது பல சமயம் அவருக்கு எதிராக திசை திரும்பினாலும் அதற்கு பதிலடி தந்துவிட்டு தன் பாணியிலான கமென்ட்களை தொடர்கிறார். நெட்டில் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிட்டு கிக் ஏற்றி வந்த அமலாபால், தற்போது கவர்ச்சியான வசனமும் எழுதி கிறங்கடித்திருக்கிறார். டைட் ஃபிட்டிங்கில் மஞ்சள் டாப்ஸ், கிரே நிற பாவாடை அணிந்து கூலிங் கிளாஸுடன் ஸ்டைலாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ அப்படியே ஆவாய் என்று சிலர் கூறுகிறார்கள். இன்றைக்கு நான் சந்தோஷமான மாங்காயாக இருக்கிறேன்’ என்ற கமென்ட்டுடன் மகிழ்ச்சியான தருணங்கள் என ஹாஷ்டேக் வெளியிட்டிருக்கிறார்.