கிராமத்து பின்னணியில் உருவாகும் கதையில் சசிகுமார், சமுத்திரக்கனியுடன் இணையும் ஜோதிகா !

கடந்த ஆண்டு ‘நாச்சியார்’, ‘செக்கச் சிவந்த வானம்‘, ‘காற்றின் மொழி’ என இவர் நடித்த மூன்று படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வருடம் வெளியான ‘ராட்சசி’ படத்திற்கும் நல்ல வரவேற்பு. தற்போது, ‘ஜாக்பாட்’ படத்தில் ரேவதியுடன் காமெடி செய்திருக்கும் ஜோதிகாவை குடும்ப ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில், ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்திவருகிறார். இப்போது, அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன.
‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இந்த படத்தை இயக்க, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இக்கதையில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.