கிராமத்து பெண்ணாக ஸ்ரேயா.

நடிகை ஸ்ரேயா நரகாசூரன் படத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார்.தற்போது தெலுங்கில் மோகன்பாபு இரண்டு வேடத்தில் நடித்துள்ள காயத்திரி படத்தில் நடித்திருக்கிறார். இந்த காயத்திரி படத்தில் முதன் முறையாக பாரம்பரியம் மிக்க ஒரு கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார். இதை பற்றி அவர் கூறுகையில் நான் நகரத்து கதையில் அதிகமாக நடித்துள்ளேன் ஆனால் எனக்கு பாரம்பரிய மிக்க கிராமத்து பெண்ணாக நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்து வந்த எனக்கு இந்த படம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குனர் சொன்ன கதையை உள்வாங்கி அந்த கதாபாத்திரமாக முழுமையாக என்னை மாற்றிக்கொண்டு  கிராமத்து பெண்களின் நடை உடை பாவனைகளை வெளிப்படுத்தி இருக்கிறேன்.இந்த படம் ரசிகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட ஸ்ரேயாவை வெளிப்படுத்தும். இந்த படம் எனக்கு முழு மனநிறைவை கொடுத்துள்ளது என்கிறார் அவர்.