கிராமத்து வாழ்க்கை பற்றி எனக்கும் நல்லா தெரியும் சார்’ – உதயநிதி ஸ்டாலின்!
அரசியல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வரும் வேளையிலும் சீனு ராமசாமி இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘கண்ணே கலைமானே' படத்தை விளம்பரப்படுத்தும் ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இது அழுத்தமான கிராமத்து கதை, அழகான அன்பை, குடும்ப உறவு களின் உன்னதத்தை சொல்லும். கமலக் கண்ணன் என்ற விவசாயியாக, மண் புழு உற்பத்தி செய்பவராக வருகிறேன். நிஜத்தில் நான் சென்னையில் பிறந்து, வளர்ந்து, வெளிநாட்டில் படித்தாலும், கிராமத்துக்கும் எனக்கும் நல்ல தொடர்பு உண்டு. நானும் எனது சகோதரியும் அடிக்கடி அம்மா வழி ஊரான திருவெண்காடுக்குச் செல்வோம். விடுமுறையை அங்கேதான் கழிப்போம். எனக்கும் கிராம வாழ்க்கை தெரியும் சார். என்னை வைத்து கிராமத் துக் கதை எடுக்க முடியுமா என்று ஆரம் பத்தில் இயக்குநர் சீனு ராமசாமி பயந் தது உண்மைதான். ஆனால், ‘நிமிர்' படத்தை பார்த்த பின்பு அவருக்கு என் மீது பெரும் நம்பிக்கை வந்து விட்டது. மேலும் தனது அரசியல் பிரவேசம் பற்றியும் கூறினார் வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்காக ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்வேன். தவிர, தி.மு.க-வைப் பொறுத்தவரையில் தனிநபர் ஒருவர், தான் போட்டியிடப் போவதாக சொல்லிக்கொள்ள முடி யாது. அப்படி அவர் முடிவெடுத்து விட முடியாது. கட்சித் தலைமை தான் வேட்பாளரை தேர்ந்தெடுத்து அறிவிக்கும்.