கிரீஸ் நாட்டில் உள்ள தீவில் நடிகை எமிஜாக்சன் திருமணம்!

நடிகை எமிஜாக்சன் தமிழில் மதராச பட்டணம், தாண்டவம், தங்க மகன், ஐ, கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களில் நடித்துள்ளார். எமிஜாக்சன் 6 வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் பிரதீக் பப்பரை காதலித்து பிரிந்தார். பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் செல் கிர்க்குடன் ஏற்பட்ட காதலும் முறிந்தது. இப்போது லண்டனில் ஓட்டல் தொழிலில் கொடிகட்டி பறக்கும் ஜார்ஜ் என்பவரை எமிஜாக்சன் காதலிக்கிறார். இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். மோதிரம் மாற்றி திருமணத்தையும் நிச்சயம் செய்துள்ளனர், திருமணத்தை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்ய பல நாடுகளை சுற்றி வந்தனர். தற்போது கிரீஸ் நாட்டில் மைகொனோஸ் தீவில் உள்ள வில்லா ஒன்றில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். கிறிஸ்தவ முறைப்படி அவர்கள் திருமணம் நடக்க உள்ளது பிறகு இங்கிலாந்தில் அவர்கள் குடியேறுகிறார்கள்.