கீர்த்திசுரேஷை வம்புக்கிழுத்த ஸ்ரீ ரெட்டி !

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேசுக்கு இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது அதனால் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 2 மாதங்களாக கடும் உடற்பயிற்சிகள் செய்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் இருக்கிறார். இதை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டியும் கீர்த்தி சுரேஷ் தோற்றத்தை கேலி செய்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில், நானும் கீர்த்தி சுரேசும் ஒரே விமானத்தில் பயணித்தோம். அப்போது நான் உள்பட யாராலும் கீர்த்தி சுரேசை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. என்னிடம் பலர் செல்பி எடுத்துக்கொண்டனர். ஆனால் கீர்த்தி சுரேசை யாருக்கும் தெரியவில்லை. எடை குறைத்த பிறகு நோயாளிபோல மாறிவிட்டார். கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நடிகையர் திலகம் படம் சிறப்பாக வந்ததற்கு டைரக்டர்தான் காரணம் எனக்கூறி அவரை வம்புக்கிழுத்திருக்கிறார்.