கீர்த்தி சுரேஷின் வெற்றி ரகசியம்

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் பிரபலமாக உள்ளார். போனி கபூர் தயாரிக்கும் பாலிவுட் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி. சில, பல நேரங்களில் படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமே இருக்காது. சும்மா வந்து சிரித்து, காதலித்துவிட்டு செல்வார். ஆனால் கீர்த்தி சொல்கிறார் தனது கதாபாத்திரத்தை விட கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறாராம். நல்ல கதை உள்ள படத்தில் நடித்தாலே போதும் என்ற கொள்கை வைத்துள்ளாராம் கீர்த்தி இதுவே தனது வெற்றியின் ரகசியம் என்கிறார் .