கீர்த்தி சுரேஷ்: சாவித்திரியாக நடிப்பது அதிஷ்டம்….

நடிகை கீர்த்தி சுரேஷ் அதிக படங்களில் நடிக்க  உள்ளார். அவர் சினிமாவிற்கு வந்து சில நாட்களிலேயே முன்னணி நட்சத்திரங்களான விஜய்,சூர்யா,தனுஷ்,சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் சாமி -2 படத்திலும்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அது தவிர விஷாலுடன் சண்டக்கோழி -2 விலும், சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் தயாராகும் நடிகையர் திலகம் படத்திலும், தெலுங்கில் உருவாகும் மகாநதி படத்திலும் சாவித்திரி வேடத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவர் சினிமா வாழ்க்கை பற்றி சொல்கிறார் “எனது சினிமா பயணம் அற்புதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரே நேரத்தில் உச்சத்துக்கு போக வேண்டும் என்ற எண்ணமும் இல்லை ஒவ்வொரு படியாக முன்னேறிக்கொண்டு இருக்கிறேன். எவ்வளவு திறமை இருந்தாலும் உழைப்பு இருந்தாலும் கடைசியில் அதிர்ஷ்டம் முக்கியம், அதுதான் இருவரை உயர்த்தும். சினிமாவில் எவ்வளவோ திறமைசாலிகள் ஜொலிக்காமல் போய் விட்டார்கள். அவர்களுக்கு அதிஷ்டம் இல்லாததே காரணம். நான் கிடைக்கிற வாய்ப்புகளை முழு கவனமுடன்  நல்ல படியாக செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறன். கிடைக்கிற கதாபாத்திரத்தில் ஈடுபாட்டுடன் நடிக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களே கிடைக்கின்றன. மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது தற்போது அது சாவித்திரி வேடத்தில் நிறைவேறியது. இந்த படத்தில் நடிப்பதை அதிஷ்டமாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.