கீர்த்தி சுரேஷ் வழங்கிய தங்க நாணயம்

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை கதையில் உருவாக்கி வரும் படம் மகாநதி. இந்த படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதில்  சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜெமினியாக துல்கர்சல்மா நடிக்கிறார். இந்த படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்த கீர்த்தி சுரேஷ்  அதன் பிறகு வேறு படங்களில் நடித்து வந்தவர், தற்போது ஐதராபாத்தில் நடைபெறும் மகாநதி  படப்பிடிப்பில்  இணைத்துள்ளார். அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு சாவித்ரி பற்றி பல அரிய தகவல்களை அவருடன் பணியாற்றிய சீனியர் கலைஞர்களிடம்  கேட்டு அறிந்து கொண்டாராம். சாவித்ரி தான்  நடித்த ஒரு பழைய படத்தின் படப்பிடிப்பில் அந்த செட்டில் பணியாற்றிய அனைவருக்கும் தங்க நாணயம் பரிசளித்ததை அறிந்து அவரும் சமீபத்தில் மகாநதி படப்பிடிப்பு குழுவினருக்கு தங்க நாணயம் வழங்கியுள்ளார்.