குடியரசு தினத்தில் வெளியாகும் AK-57 படத்தின் பர்ஸ்ட்லுக்!

அஜித் வேதாளம் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, ஐதராபாத் என நடைபெற்று வரும் நிலையில், தற்போது 75% படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. மேலும், இந்த படம் குறித்த எந்த தகவலையும் இதுவரை வெளியிடாமல் வைத்திருக்கும் நிலையில், பொங்கலுக்கு அப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது குடியரசு தினத்தன்று தல 57வது படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாக இருப்பதாக படக்குழுவினரிடமிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.