குடும்பப் பொறுப்பில் கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைப்பதில்லை- நடிகை சிவரஞ்சனி!

1990-ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர், சிவரஞ்சனி. 21 ஆண்டுகளாக சினிமாவைவிட்டு விலகியிருப்பவர், இப்போது எப்படி இருக்கிறார். தன் குடும்ப வாழ்க்கை பற்றிப் பேசும்போது, சிவரஞ்சனியின் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி. 1997-ம் வருஷம், தெலுங்கு நடிகர் ஶ்ரீகாந்துக்கும் எனக்கும் காதல் திருமணம் நடந்துச்சு. இப்போவரை நான் ஆந்திராவில்தான் வசிக்கிறேன். இடைப்பட்ட காலங்களில் சினிமா, சின்னத்திரை என எக்கச்சக்க வாய்ப்புகள் வந்தபோதும் மறுத்துட்டேன். குடும்பப் பொறுப்பில் மட்டுமே கவனம் செலுத்துறேன். அதில் கிடைக்கும் சந்தோஷம் வேற எதிலும் எனக்குக் கிடைக்கிறதில்லை. என் கணவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர். அதனால், தெலுங்குத் திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்துப்பேன். எனக்கு மூணு குழந்தைகள். பெரிய பையன் ரோஷன் ஒரு படத்தில் நடிச்சுட்டான். பொண்ணு மேதாவுக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம். `நான் சினிமா ஸ்டார் ஆகப்போறேன்'னு கடைக்குட்டி ரோஹன் இப்போதே முடிவுப் பண்ணிட்டான்” எனப் புன்னகைக்கிறார் சிவரஞ்சனி.